அவதானி-
கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை விட்டு விலகியாதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தது.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அனைத்து அதிகாரங்களும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலுக்கு வழங்கப்பட்டதால் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாலும் கட்சியை விட்டு வெளியாகின்றேன் எனவும் அவர் தெரிவித்ததாகவும் எமது அவதானி தெரிவித்தார் .
அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் வழங்கப்பட்ட அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக எமது அவதானி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இவர் எதிர்வரும் 19ஆம் திகதி பாலமுனையில் இடம்பெறவுள்ள முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் இணையவுள்ளதாகவும் சமூக வலையத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகின்றது. என்பதும் குறிப்பிடத்தக்கது.
