மக்கள் காங்கிரஸை விட்டு வெளியேறிய சிராஸ் மீராசாஹிப்? முஸ்லிம் காங்கிரஸில் இணைவு?

அவதானி-

ல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை விட்டு விலகியாதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தது. 

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அனைத்து அதிகாரங்களும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலுக்கு வழங்கப்பட்டதால் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாலும் கட்சியை விட்டு வெளியாகின்றேன் எனவும் அவர் தெரிவித்ததாகவும் எமது அவதானி தெரிவித்தார் .

அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் வழங்கப்பட்ட அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக எமது அவதானி மேலும் தெரிவித்தார். 

இதேவேளை, இவர் எதிர்வரும் 19ஆம் திகதி பாலமுனையில் இடம்பெறவுள்ள முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் இணையவுள்ளதாகவும் சமூக வலையத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகின்றது.  என்பதும் குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -