நுவரெலியா மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்...!

க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உடன் தொழில் வழங்கக் கோரி நுவரெலியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் 15.03.2016 காலை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டம் நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பு பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்றது. இதன்போது 50ற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்களின் பட்டப்படிப்பினை முடித்து வேலையில்லாத நிலையில் மிகவும் கஷ்டத்தினை எதிர்நோக்கி வருவதாகவும் உடனடியாக அரசாங்கம் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் இதன்போது தெரிவித்தனர்.

அத்தோடு பட்டதாரிகள் மூலம் தயாரிக்கப்பட்ட மணு ஒன்றும் நுவரெலியா பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்வதாக ஆர்ப்பாட்டகாரர்கள் மேலும் தெரிவித்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -