பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் - ஹிஸ்புல்லாஹ், சிப்லி, யஹியாகான்

 இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 

கடந்த வருடம் நடைபெற்ற க.பெ.த. சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த 2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி தற்போது சித்தியடைந்துள்ள சகல மாணவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல பிரதேசங்களில் வறுமைக்கு மத்தியிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டு மாணவர்கள் சிலர் பரீட்சைக்கு தோற்றி இன்று சித்தியடைந்துள்ளனர். அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனைப் பிரார்திக்கிறேன்.

விசேடமாக, வெளியாகியுள்ள பரீட்சைப் பெறுபேறுகளின் படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. இது தொடர வேண்டும். சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சித்தியடையாத மாணவர்கள் மீண்டும் முயற்சிக்க வேண்டும். தொழிநுட்பம் சார்ந்த வேறு துறைகளில் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். – என அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

2015ம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விடுக்கும் வாழ்த்துச்செய்தி

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். 

இப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்விகற்பதற்கு தெரிவான மாணவர்கள் தமது பிரிவில் சிறந்த முறையில் படிப்பினை மேற்கொண்டு பல்கலைக்கலகத்திட்கு தெரிவாகி இப்பிரதேசத்திற்கும், இம்மக்களுக்கும், சிறந்த சேவைகளை வழங்கி அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்

மேலும் அவர் தனது வாழ்த்து செய்தியில் இச் சாதாரணதர பரீட்சையில் காத்தான்குடி பிரதேச பாடசாலைகளில் இருந்து சிறந்த சித்தியுடன் பல மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு தெரிவாகியுள்ளனர் என்பது இப்பிரதேசத்திட்கு ஓர் மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமை சேர்க்க கூடிய விடயமாகும்.

 இவ்வாறு சித்தியடைந்து உயர் கற்கைநெறிகளுக்கு தெரிவாகிய அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உளப்பூர்வமாக மகிழ்ச்சியடைகின்றேன்.

இதே போன்று ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர்தர கற்கைகளுக்கு தெரிவான அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும், அதே நேரம் இப்பரீட்சையில் சித்தி அடையாத அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வருத்தத்தினை தெரிவிப்பதோடு அவர்கள் சோர்ந்து துவண்டு விடாமலும்இ கல்வியை இடைநடுவில் விட்டுவிடாமலும் மீண்டுமொரு முறை முயற்சி செய்துஇ முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழிக்கமைய அவர்கள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றி தனது ஆற்றலினை வெளிப்படுத்தி நல்ல பெறுபேறுகளை பெற்று உயர்கல்வியை தொடர வேண்டுமென வாழ்த்துகிறேன்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இதே போல் கிழக்கு மாகாணத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பததோடு, ஒட்டுமொத்தமாக நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று தெரிவான அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உளப்பூர்வமாக மிக்க மாகிழ்ச்சி அடைகின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

2015ம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விடுக்கும் வாழ்த்துச்செய்தி

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். 

இப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்விகற்பதற்கு தெரிவான மாணவர்கள் தமது பிரிவில் சிறந்த முறையில் படிப்பினை மேற்கொண்டு பல்கலைக்கலகத்திட்கு தெரிவாகி இப்பிரதேசத்திற்கும், இம்மக்களுக்கும், சிறந்த சேவைகளை வழங்கி அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்

மேலும் அவர் தனது வாழ்த்து செய்தியில் இச் சாதாரணதர பரீட்சையில் காத்தான்குடி பிரதேச பாடசாலைகளில் இருந்து சிறந்த சித்தியுடன் பல மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு தெரிவாகியுள்ளனர் என்பது இப்பிரதேசத்திட்கு ஓர் மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமை சேர்க்க கூடிய விடயமாகும். 

இவ்வாறு சித்தியடைந்து உயர் கற்கைநெறிகளுக்கு தெரிவாகிய அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உளப்பூர்வமாக மகிழ்ச்சியடைகின்றேன்.

இதே போன்று ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர்தர கற்கைகளுக்கு தெரிவான அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும், அதே நேரம் இப்பரீட்சையில் சித்தி அடையாத அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வருத்தத்தினை தெரிவிப்பதோடு அவர்கள் சோர்ந்து துவண்டு விடாமலும், கல்வியை இடைநடுவில் விட்டுவிடாமலும் மீண்டுமொரு முறை முயற்சி செய்து, முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழிக்கமைய அவர்கள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றி தனது ஆற்றலினை வெளிப்படுத்தி நல்ல பெறுபேறுகளை பெற்று உயர்கல்வியை தொடர வேண்டுமென வாழ்த்துகிறேன்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இதே போல் கிழக்கு மாகாணத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பததோடு, ஒட்டுமொத்தமாக நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று தெரிவான அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உளப்பூர்வமாக மிக்க மாகிழ்ச்சி அடைகின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

யஹியாகான் 

கா.பொ.தர சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த அணைத்து மாணவ, மாணவிகளுக்கும் உயர்பிட உறுப்பினர் யஹியாகான் விடுக்கும் வாழ்த்துச் செய்தி.

இன்று வெளியான பெறுபேற்றின் பிரகாரம் எமது தாய்நாட்டிக்கும் எமது கல்முனைப் பிரதேசத்திற்கும் மற்றும் பெற்றோருக்கும் சிறந்த பெறுபேற்றின் மூலம் பெருமை தேடித்தந்த என் அன்புக்குறிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் என் மணமார்ந்த நன்றியினை தெரிவிப்பதோடு மேலும் உங்கள் உயர் கல்வியை நல்ல முறையில் தொடர்ந்து அதிலும் சிறப்பான பெறுபேற்றினைப் பெற்று எமது பிரதேச கல்வி வளர்ச்சியை அதிகப்படுத்தி எமது மண்ணுக்கு பெருமை சேர்க்க வல்ல இறைவனை பிராத்திப்பதோடு என் இனிய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பிட உறுப்பினர் யாஹியாகான் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -