ஊடகங்களிற்கு பச்சை பொய் சொல்லும் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் -சுபியான் மௌலவி காட்டம்

பாறுக் ஷிஹான்-

சில ஊடகங்களிற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் என்னை பற்றி தவறாக தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது என யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சுபியான் மௌலவி குறிப்பிட்டார்.

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இனவாதம் பேசப்பட்டதாக செய்தி வந்திருந்த நிலையில் அதற்கான மறுப்பு செய்தியொன்றினை மௌலவி சுபியான் போலியாக வழங்கியதாக மாகாண சபை உறுப்பினர் சில ஊடகங்களை தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.

இந்நிலையில் குறித்த மாகாண சபை உறுப்பினர் தான் மௌலவி சுபியானிடம் குறித்த செய்தி தொடர்பாக உரையாடியதாகவும் அதற்கு மௌலவி சுபியான் கொழும்பில் தான் இருப்பதாகவும் அவ்வாறான செய்தியை ஒரு போதும் வெளிப்படுத்தவில்லை என்றும் மறுநாள் யாழிற்கு வந்து அது தொடர்பாக மறுப்பறிக்கை ஒன்றை தருவதாக தன்னிடம் கூறியதாக ஊடகங்கள் சிலவற்றுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட கூறியிருந்தார்.

இதனை அடுத்து மௌலவி சுபியானிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ;

மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் கதைப்பதாக தொலைபேசியல் ஒரு நபர் தொடர்பு கொண்டு என்னுடன் கதைத்தார்.அவர் அதன் போது நீங்கள்(மௌலவி) தான் அனுப்பிய முஸ்லீம் மக்களிற்கு இனவாதம் பேசிய முதலமைச்சர்,சிறிதரன்,சிவாஜிலிங்கம் என்ற செய்தி என்.எம் அப்துல்லாஹ்)செய்திக்கு அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை என மறுத்து செய்தி அனுப்பினீர்களா என கேட்டார்.

அதற்கு நான் அனுப்பினேன்.என சொன்னேன்.தொடர்ந்து செய்தித் தலைப்பு யார் சொன்னது என கேட்டுவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார்.

இவ்வாறு துண்டித்த மாகாண சபை உறுப்பினர் மௌலவி சுபியானின் செய்தி வந்திருந்த அனைத்து ஊடகங்களிற்கும் தொடர்புகளை ஏற்படுத்தி மௌலவி சுபியானிடம் தான் தொடர்பு கொண்டு கதைத்ததாகவும் ஆனால் குறித்த செய்திக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தற்போது மௌலவி கொழும்பில் இருப்பதாகவும் நாளை யாழிற்கு வந்து குறித்த செய்திக்கு மறுப்பு தருவதாக கூறியதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.


இந்நிலையில் குறித்த செய்தியை பிரசுரித்த ஊடகங்கள் அதனுடன் தொடர்புடைய ஊடகவியலாளரை தொடர்பு கொண்டு மௌலவி சுபியானிடம் மாகாண சபை உறுப்பினர் கூறுவது சரியா என கேட்டனர்.

ஆனால் மௌலவி அதனை மறுத்ததுடன் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதி நிதி என்ற வகையில் இனவாதம் ஒன்றும் அங்கு கதைக்கப்படவில்லை எனவும் யாழ்ப்பாண பொதுமக்களுக்கு எதிராக யாரும் இனவாத் பேசவில்லை மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் யாழ் பிரதேச செயலாளருக்கு எதிராக அவர் பேசிய விதத்தினை சுட்டிக்காட்டியே அங்கிருந்தவர்கள் பேசினார்கள் எனவும் ஊடகங்களிற்கு சுட்டிக்காட்ட வேண்டியதன் பொறுப்பு தனக்கு உள்ளதாக தெரிவித்தார்.


அத்துடன் மாகாண சபை உறுப்பினர் ஊடகங்களிடம் நான் கொழும்பில் இருப்பதாகவும் இகுறித்த செய்திக்கு வருந்தி மறுப்பறிக்கை தயார் செய்வதாக கூறியமை பச்சைப்பொய் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் மெ;.கே சிவாஜிலிங்கமும் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

மேற்படி செய்தி வாதமானது கடந்த (28) யாழ் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் இனவாதம் பேசப்பட்டதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் பல ஊடகங்களிற்கு செய்தி அனுப்பியதை அடுத்து அதற்கு பதிலளித்து பேசிய மௌலவி பி.ஏ.எஸ் சுபியான் அவ்வாறு ஒன்றும் தெரிவிக்கவில்லை என்ற விடயத்தின் பதிலாக அமைந்துள்ளது.

மேலும் சில ஊடகங்களில் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தனக்கு எதிராக கவும் முஸ்லீம் மக்களிற்கு எதிராகவும் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன்.பாராளுன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் இனவாதம் மேற்கொண்டதாக என்.எம் அப்துல்லாஹ் என்கின்ற பெயரில் செய்திகளை அனுப்பி இருந்தார்.

அதற்கு மௌலவி சுபியான் இவ்வாறாக இனவாதம் ஒன்றும் அங்கு கதைக்க அவர்கள் முற்படவில்லை .மாறாக வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் யாழ் பிரதேச செயலாளருக்கு எதிராக அவர் பேசிய விதம் குறித்தும் சபையில் குறித்த மாகாண சபை உறுப்பினர்(அஸ்மீன்) பேச வேண்டிய ஒழுங்கையும் நாகரிகத்தையும் கடைப்பிடிக்கும் படியும் கேட்டுக் கொண்டனரே தவிர யாரும் அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசவில்லை. என்பதை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பலரை தவறாக வழிநடத்தியமை வெளிச்சத்துக்கு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவ்விடயம் குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் ஏதாவது தெரிவித்தால் அவற்றை நாம் பிரசுரிப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -