PSDG திட்டத்தின் கீழ் ஆறுகளை அன்டிய பிரதேசங்களில் மறுவயற் பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்காக தம்பிலுவில்,தங்கவேலாயுதபுர விவசாய விரிவாக்கல் நிலையத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு உள்ளீடுகளை வழங்கும் நிகழ்வானது தம்பிலுவில் விவசாயப் போதனாசிரியர் திருமதி தர்சினி ரவிச்சந்திரன் தலைமையின் கீழ் தம்பிலுவில் கமநல சேவை மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு அதிதியாக லாகுகல வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.ஐ.எம் இஸ்மாலெப்பை அவர்களும் தம்பிலுவில் கமநல உத்தியோகத்தர் ம.சிதம்பரநாதன் அவர்களும் மற்றும் தம்பிலுவில் விவசாயப் போதனாசிரியர் திருமதி தர்சினி ரவிச்சந்திரன் தங்கவேலாயுதபுர விவசாயப் போதனாசிரியர் எஸ்.சுஜிகாந்தன் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் நோக்கங்களையும் எதிர் வரும் காலங்களில் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்கள் பற்றியும் அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட லாகுகல வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.ஐ.எம் இஸ்மாலெப்பை அவர்கள் உரையாற்றினார்.
தம்பிலுவில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.சிதம்பரநாதன் அவர்கள் மாற்றுப் பயிர்ச்செய்கை சம்பந்தமாகவும் நெற்பயிர்ச்செய்கைக்கான மானிய உரம் வழங்கப்படவுள்ள புதிய நடைமுறை பற்றியும் உரையாற்றினார்.
இதன்போது விவசாயிகளுக்கு கம்பிச் சுருள்கள் - 60 , நீர் இறைக்கும் இயந்திரங்கள் - 06, தெளிகருவிகள் - 06 , கோஸ் -06 உம் அரைவாசி மானிய விலையின் கீழ் வழங்கப்பட்டது.


