எம்.ஜே.எம்.சஜீத்-
அல்- அர்ஹம் வித்தியாலய ஏழை மாணவர்களுக்கு தியாக உணர்வுடன் கல்விப் பணி செய்து வரும் சிறந்த அதிபர் மற்றும் எந்தவொரு ஆசிரியரையும் எதிர்காலங்களில் இடமாற்றங்கள் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் அதனை பாடசாலை சமூகம் ஒரு போதும் அனுமதிக்காது. பாடசாலை அபிவிருத்தி குழுச் செயலாளர் சலீம் றமீஸ்.
அல் அர்ஹம் வித்தியாலய ஏழை மாணவர்களுக்கு தியாக உணர்வுடன் கல்விப் பணி செய்து வரும் சிறந்த அதிபர், எந்தவொரு ஆசிரியரையும் எதிர்காலங்களில் இடமாற்றங்கள் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் அதனை பாடசாலை சமூகம் ஒரு போதும் அனுமதிக்காது. இப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு அதிபர் எம்.ஏ.அன்சார் அவர்களுடைய சிறந்த முகாமைத்துவமும், தியாக மனப்பாங்கும், ஆளுமையுமே காரணமாக அமைந்தது என பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளரும், சமாதான நீதவானுமாகிய ஊடகவியலாளர் சலீம் றமீஸ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்தில் கடந்த 15 வருடங்கள் அதிபராக பதவி வகித்து அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று சென்ற அதிபர் எம்.ஏ.அன்சார் அவர்களுக்கான பிரியா விடை வைபவமும், புதிய அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் பாடசாலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு, மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த வைபவம் பிரதி அதிபர் எஸ்.எம்.றஹிம் தலைமையில் நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய செயலாளர் சலீம் றமீஸ் கூறுகையில்...
அதிபர் அன்சார் அவர்கள் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு இப்பாடசாலையின் கல்வியை வளர்த்தெடுத்து கிழக்கு மாகாணம் முழுவதும் அதன் பெயரை பிரதிபலிக்கச் செய்துள்ளார். ஆசிரியர்களுடன் நட்புறவு வைத்து பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பனர்களுடன் இணைந்து பெற்றோர்களுடைய ஒத்துழைப்புடன் கல்விக்காக பாரிய பணியாற்றியுள்ளார். விசேடமாக இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சி மற்றும் ஏனைய அபிவிருத்திக்காக இப்பிரதேசத்திலுள்ள அமைச்சர்கள், அரசியல்வாதிகள், மற்றும் பழைய மாணவர்கள், முக்கியஸ்தர்களுடன் நல்லுறவை பேணி வந்துள்ளார்.
இப்பாடசாலையின் கல்விக்கு அயராது பாடுபட்டதனால்தான் தொடர்ச்சியாக 15 வருடமாக பாடசாலை சமூகத்தின் நன் மதிப்பினை பெற்று பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவருடைய இந்தப் பணிக்கு இப்பிரதேச பெற்றோர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், அரசியல்வாதிகளும் பக்கபலமாக இருந்து வந்துள்ளனர்.
இவ்வாரான செயற்பாடுகளில் இருக்கின்ற போதுதான் அதிபருடைய இடமாற்றம். இந்த இடமாற்றத்தினை ஒரு விபத்தாகவே நாங்கள் பார்க்கின்றோம். பாடசாலை சமூகம் கவலை அடைந்தது. அவரின் சுய விருப்பத்தின் பேரில் அவரின் நலனுக்காக இந்த இடமாற்றம் ஏற்படவில்லை என்றிருந்தால் இப்பாடசாலையை விட்டு இடமாற்றம் பெற்று செல்வதற்கு எமது பாடசாலை சமூகம் அனுமதித்திருக்காது. இவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது.
புதிய அதிபராக இவரைப் போன்று செயல்படக் கூடிய ஏ.எம்.எம்.இத்ரீஸ் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள் இதன்பிறகு நிம்மதி அடைந்தோம். இருந்தாலும் இப்பாடசாலையை பொருத்தவரையில் முன்னாள் அதிபரும், இன்றைய அதிபரும் இந்தப் பாடசாலைக்குரிய அதிபர்கள்தான். 15 வருட அதிபர் அனுபவங்களை வைத்து புதிய அதிபருக்கு ஆலோசனைகளை வழங்கி இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்தம் பங்களிப்பினை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பாடசாலையினுடைய கல்விச் செயற்பாடு புதிய அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் அவர்களுடைய தலைமையில் தொடர்ந்தும் செல்ல வேண்டும். புதிய அதிபர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. முன்னாள் அதிபர் விட்ட இடத்திலிருந்து தனது பணியை தொடர வேண்டும். அதிபர் மாத்திரமே இடமாற்றம் பெற்றுச் சென்றிருக்கிறார். ஏனைய ஆசிரியர்கள், ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் பணிகளை செய்து வருகின்றனர். ஏனைய தரப்பினரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களையும், உதவிகளையும் வழங்க வேண்டும்.
இப்பாடசாலை கல்வி விடயத்தில் இப்பிரதேச பெற்றோர்கள், நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர். அதே நேரம் விழிப்பாகவும் இருந்து வருகின்றனர். எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் அவர்களும் நிறைய உதவிகளை செய்துள்ளார்கள்.
அல் அர்ஹம் என்றால் மனதில் பதிந்த விடயம் அதிபரின் சிறந்த பணி, பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்பு, ஒற்றுமை அவருக்கு தெரிந்த விடயம். இதன் அடிப்படையில் பாடசாலை தொடர்பாக தேவைகளை கோருகின்ற போது மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் முடியுமானவரை செய்து தந்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் பாடசாலை சமூகம் ஒது போதும் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களை மறக்கமாட்டாது.
அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி அவர்களும் பூரண ஒத்துழைப்பு, ஆலோசனையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். விசேடமாக முன்னாள் அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா, எம்.எஸ்.உதுமாலெப்பை, ஆகியோர் இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சி, ஆசிரியர்கள் நியமனம், தேவையான ஊழியர்களை பெற்றுத்தரல் போன்ற ஏனைய அபிவிருத்திகளிலும் கவனமாக இருந்து தங்களது பணிகளை செய்து வந்துள்ளனர். இது போல் இன்றைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ,எல்.எம்.நஸீர் அவர்களும் பாடசாலை விடயத்தில் அக்கரையுடன் செயல்பட்டு வருகின்றார் என மேலும் சலீம் றமீஸ் தெரிவித்தார்.
