நூல் வெளியீடும் இலக்கிய வாதிகள் கௌரவிப்பும்

முஹம்மட் ஹனீபா-

டாகம் கலை இலக்கியவட்டம் கலை கலாசார பன்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி றியாஸ் முஹம்மட் எழுதிய 'முகவரி இழந்த முச்சந்தி' கவிதை நூல் வெளியீடும் இந்திய எழுத்தாளர்கள் வரவேற்பும் , கலை இலக்கிய வாதிகள், சமூக சேவையாளர்கள் கௌரவிப்பும் அண்மையில் (28) ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் கலைமகள் ஹிதாயா றிஸ்வி தலைமையில் நடை பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சர் றிஷhட் பதூர்தீன் பிரதம அதீதியாக கலந்து கொண்டார்.

கௌரவ அதீதியாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க உயரதிகாரிகள் இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த இலக்கிய வாதிகள், பிரபல எழுத்தாளர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த கவிஞினி மௌலவியா நுஹா டாக்டர் நியாஸ் அவர்கள் அமைச்சர் அவர்களினால் கவியருவி பட்டமளித்து கௌரவிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -