ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத மாற்றுக்கட்சியினரும், மக்கள் ஆதரவில்லாத சில செல்லாக்காசுகளும் ஒன்றினைந்து பாரிய சதித்திட்டங்களில் ஈடுபட்டு வருவதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.
இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எழுச்சியையும், மக்கள் ஆதரவையும் இல்லாமல் செய்வதற்கு தமது சகலவிதமான அதிகாரங்களையும் பயன்படுத்தவதற்கு தீர்மானித்து அது தொடர்பான செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் மாநாட்டில் கலந்து கொள்கின்றபோது அங்கு திரளவுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் முஸ்லிம் காங்கிரஸ்தான் முஸ்லிம்களின் சக்தி என்பதை நிருபித்துவிடும் என்ற பயத்தினாலும், பொறாமையினாலும் எப்படியாவாது மாநாட்டைக் குழப்பி பெருந்திரளான மக்கள் கலந்து கொள்ளவதை தடுப்பதற்கு அசிங்கமான கேவலம் கெட்ட காரியங்களில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.
அதன் முதற்கட்டமாக முக்கிய பிரமுகர்களுக்கும், பொது அமைப்புக்களின் பொறுப்புதாரிகளுக்கும் மொட்டைக்கடிதங்களை அரசபணிகள் கடித உறையில் அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் பல பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி எப்படியாவது மாநாட்டிற்கு மக்களை போக விடாமல் தடுப்பதற்கான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
தற்போது பதிவு செய்யப்படாமல் செயற்படும் சில இணையத்தளங்களை தங்களது கைக்குள் போட்டுக் கொண்டும், வழமையான தங்களது நூற்றுக்கணக்கான பொய்யான முகநூல் பக்கங்களை பயன்படுத்தியும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு எதிராக அபாண்டமாக கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.
அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் விடயம், சாய்ந்தமருது பிரதேச சபை விடயம், அக்கரைப்பற்று நுரைச்சோலை விடயம், ஒலுவில் விடயம் போன்றவற்றை முன்வைத்து தேசிய மாநாட்டிற்கு குறித்த பிரதேசத்தின் மக்கள் போவதைத் தடுப்பதுதான் பிரதான நோக்கமாகும்.
பெருந்திராளான மக்களை ஒன்றுகூட்டுவதற்கான சக்தியும், பலமும் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் அம்பாரை மாவமட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் தங்களது கட்சிக்கு இடமில்லாமல் போகும் என்ற பீதியினால் பிடித்த காய்யச்சலை இல்லாமலாக்க வேண்டும் என்பதற்காகவே கீழ்த்தரமான வேலைகளில் குறிப்பிட்ட கட்சியும், சுயநலவாதிகள் சிலரும் ஈடுபட்டுள்ளனர்.
இன்று தன்னை தேசியத் தலைவர் என்று அழைக்க வேண்டும், சொல்ல வேண்டும் என்று பைத்தியம் பிடித்தவர் போன்று அலைந்து திரியும் அமைச்சர் ஒருவரும், முஸ்லிங் காங்கிரஸ் கட்சியினால் தேசியப்பட்டியல் கிடைக்கவில்லை என்பதற்காக கட்சிக்குள் இருந்து கொண்டு தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு சீடிக்கதை சொல்லி குழிபறித்திக் கொண்டிருக்கும் அந்த நபரும், பணத்திற்கும்,பதவிக்கும் தங்களை ஆட்படுத்திக் கொண்டுள்ள சில இணையத்தளங்களும், விலாசமில்லாமல் தொலைந்துவிட்ட முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் சில ஒட்டுன்னிகளும் ஒன்றினைந்து நாசகார சதி வேலைகளில் ஈடுபட்டுள்னனர்.
சீடிக்கதை சொல்லும் அந்த நபர் முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருக்கின்ற ஒரு சில மக்கள் ஆதரவில்லாத செல்லாக்காசுகளை வளைத்துப்பிடித்து ஒரு கடிதத்தில் பைகையொப்பங்களைப் பெற்றுள்ளதாகவும் ஒரு கதை இன்று உலாவுகின்றது. இதற்காக பெருந் தொகைப்பணங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
தேசியத்தலைவர் என்று அழைப்பார்களா? என்ற கனவோடு உலாவும் குறித்த அமைச்சர் ஒருவர் அம்பாரை மாவட்டத்தில் மூன்று தினங்கள் தங்கியிருந்து கட்சியின் முன்னடுப்புக்கள் என்ற போர்வையில் பாரிய சதித்திட்டங்களை தீட்டுவதற்காக வருகை தரவுள்ளாராம்.
மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி குழப்பகரமான சூழ்நிலைக்குள் மக்களை தள்ளுவதே குறித்த அமைச்சரின் சிந்தனையாகும். இதற்காக ஒவ்வொரு பிரதேசத்திலும் சமூக விரோதிகளை தயார்படுத்த நினைத்துள்ளனர்.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் மாநாட்டைக் குழப்புவதற்காக சீடிக்கதை சொல்லும் அந்த நபரும், தேசியத் தலைவர் கனவோடு உலாவிவரும் குறித்த அமைச்சரும் ரகசிய இடமொன்றில் சந்தித்துக் கொண்டதாகவும் ஒரு கதை வந்துள்ளது.
குறித்த சந்திப்பின்படி சீடிக்கதை சொல்லும் அந்த நபர் தேசிய மாநாடுட்டு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காக நாளை மறுதினம் பாலமுனைக்கு வரவுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான கொழும்பு ஊடகம் ஒன்று கதையை கசிய விட்டுள்ளது.
மாநாட்டுக்கு வேலை செய்வதாகக் காட்டிக் கொண்டு மாநாட்டைக் குழப்புவதற்கான துப்புக்களை குறித்த அமைச்சருக்கு அங்கிருந்து கொடுக்கவுள்ளார். இது குறித்த முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தெளிபடுத்தப்பட்டு வருவதாகவும், சதி வேலைகளில் ஈடுபடக் காத்திருக்கும் சீடிக்கதை சொல்லும் அந்த நபருக்கு பாரிய பரிசு ஒன்றை வழங்க போராளிகள் தயாராகி வருவதாகவும் நம்பகரமாகத் தெரிய வருகின்றது.
கட்சியையும் தலைமையும் காட்டிக் கொடுத்து பதவி பெற்றவர் இன்று பதவியில்லாமல் மக்கள் செல்வாக்கு இல்லாமல் இருப்பதன் எதிரொலியே மேற்படி சதிக்கு துனை போனதாகும்.
அரசியல் கட்சிக்கு எதிராக கொள்கைள் பேசி மக்களை தமது பக்கம் இழுப்பதுதான் அரசியல் நாகரிகமாகும். அதைவிடுத்து சூழ்ச்சிகளையும், அசிங்கங்களையும் பேசியும், எழுதியும் மக்களை இழுக்க முடியாது.
மக்கள் தெளிவாக உள்ளனர். முஸ்லிம் காங்கிரஸின் மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கில் அணி அணியாக மக்கள் திரளவுள்ளனர். இதனை எந்த சூழ்ச்சிகர சக்திகளாலும் முறியடிக்க முடியாது. 19ம் திகதி முழு நாடும் இதனை அறியும்.

