என்.எம்.அப்துல்லாஹ்
யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் 65000 வீட்டுத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்குமாறு சில தனிநபர்கள் ஊடகங்கள் வாயிலாக அறிவித்தல்களை விடுத்துள்ளார்கள்.
இதுவிடயமாக அதிகளவான யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்னை தொலைபேசிவாயிலாக தொடர்புகொண்டு இதுகுறித்த மேலதிக விபரங்களைத் தருமாறு கோருகின்றார்கள், மக்களுடைய வேண்டுகோலுக்கு அமைய இதுவிடயமாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திருஎன்.வேதநாயகன் அவர்களைத் தொடர்புகொண்டு நிலைமைகளை விளக்கிக் கூறி விபரங்களைத் தருமாறு கோரியிருந்தேன்.
அதன்படி
65000 வீட்டுத்திட்டங்களுக்கான வீட்டுத்திட்டப் பயனாளிகளைத் தெரிவு செய்யும் விண்ணப்பங்கள் எதுவும் இதுவரை மீள்குடியேற்ற அமைச்சினால் கோரப்படவில்லை, தற்போது மேற்படி வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட கருத்துகள் இருக்கின்ற காரணத்தினால் குறித்த வீட்டுத்திட்டத்திற்கு மக்கள் விருப்பு இருக்கின்றதா என்பதை அறியும்பொருட்டு பத்திரிகை வாயிலாகவும், நேரடியாகவும் விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து கோரப்பட்டிருக்கின்றன. இதற்கான விண்ணப்பங்களை மக்கள் நேரடியாக அமைச்சிலோ அல்லது மாவட்ட, பிரதேச செயலகங்களிலோ சமர்ப்பிக்க முடியும், இந்த விண்ணப்பங்கள் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் அல்ல என்பதை மக்கள் கவனத்தில் கொள்ளவும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவு மாவட்ட ரீதியில் மாவட்ட செயலகத்தினால் மேற்கொள்ளப்படும், அதற்கான விண்ணப்பங்கள் இதுவரை கோரப்படவில்லை என்பதையும் மக்கள் கவனத்தில் கொள்ளும்படியும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண முஸ்லிம்களுள் ஒரு குறிப்பிட்ட தொகையினர் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் இப்போது மீள்குடியேறியிருக்கின்றார்கள். ஏனையவர்கள் மீள்குடியேற்றப் பதிவுகளை மேற்கொண்டுவிட்டு யாழ்ப்பாணத்திற்கு வெளியில் புத்தளம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிக்கின்றார்கள். இவர்கள் ஏதாவது உதவித் திட்டங்கள் என்ற அறிவித்தல்களை கேள்விப்பட்டதும் தம்முடைய தொழில்களை விட்டுவிட்டு கூடுதல் பணங்களை செலவு செய்து, சிரமங்களை எதிர்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டியவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு வழங்கப்படுகின்ற அறிவித்தல்கள் மிகவும் சரியானதாகவும், பயனுள்ளதாகவும் இருத்தல் அவசியமாகும். இதுவிடயத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்துகின்றோம்.
ஏற்கெனவே இதுவிடயமாக ஜே86, ஜே87 கிராம சேவையாளர்களைத் தொடர்புகொண்டு வினவியதற்கு அமைய அவர்களும் மேற்படி விபரங்களை உறுதி செய்திருந்தார்கள், மக்கள் குறித்த கிராம சேவையாளர்களை தொடர்புகொள்வதற்கு வசதியாக அவர்களது தொடர்பு இலக்கங்களை இத்தால் தருகின்றேன் (ஜே 86 திரு.அருந்தமிழ்ச் செல்வன்
077 776 8100 ஜே 87- திரு சேந்தன்
077 284 5199) விண்ணப்பங்களை வழங்க விரும்புவோர் தமது பிரதேச கிராம சேவையாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.
077 776 8100 ஜே 87- திரு சேந்தன்
077 284 5199) விண்ணப்பங்களை வழங்க விரும்புவோர் தமது பிரதேச கிராம சேவையாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.
ஊடகத்துறை நண்பர்களுக்கான பணிவான வேண்டுகோள் என்னவென்றால், மக்களுக்கான தகவல்கள் வழங்கும்போது அவற்றின் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதுவே தங்களது விருப்பமாகவும் நோக்கமாகவும் இருக்கின்றது, ஆனால் தங்களது ஊடகங்களை வேறு சிலர் தமது சொந்த நலன்களுக்காக பயன்படுத்தி வருகின்றார்கள் இதுவிடயத்தில் தாங்கள் எல்லோரும் அவதானமாக இருக்குமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றேன். இதுவரைகாலமாக யாழ்ப்பாண முஸ்லிம்களின் முதுகுகளில் சவாரி செய்தவர்கள் இனியாவது பொறுப்போடு நடந்துகொள்தல் வேண்டும் என்று இவ்விடத்தில் பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றேன்.
தகவல் எம்.எம்.எம்.நிபாஹிர் (தலைவர்- தகவல் வழிகாட்டல் மத்திய நிலையம்)
