யோகா பயிற்சியில் நாமல் ராஜபக்ச...!


மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச யோகா பயிற்சியில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களை யார் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த வருடத்தில் தலைகீழாக தொங்கி யோகா பயிற்சியில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டன.

அதாவது மஹிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தனது மன நிலையை திடப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த வருடம் 70வது பிறந்த தினத்தை கொண்டாடிய இவர், மறுதினம் இலங்கையின் புகழ்பெற்ற யோகாசன பயிற்சியாளரான நந்த சிறிவர்த்தன விடம் யோகா பயிற்சி பெறும் புகைப்படம் ஒன்றை அவரது புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தனது முகநூலில் பதிவேற்றி இருந்தார்.

இந்ந புகைப்படங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த மஹிந்த ராஜபக்ச இந்த படங்களை எனது மகன் நாமல் தான் வெளியிட்டார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது நாமல் ராஜபக்ச யோகா பயிற்சியில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களை யார் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -