அட்மிரல் ஓகொய்ன், உங்களுடைய அன்பான அறிமுகத்திற்கு நன்றி. இந்த கப்பலையும், ஊழியர்களையும் இங்கு அழைத்து வந்தமைக்கும் நன்றி. உங்கள் அனைவரையும் இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய உரையை மிகவும் சுருக்கமாக முடித்துக் கொள்ள நினைக்கின்றேன்.
தெற்காசியாவிலே மழை என்பது எப்போதும் நல்ல அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது. எனவே, இன்றிரவும் அதனை நல்ல அறிகுறியாகவே நாம் பார்க்கப் போகின்றோம். ஆதலால், அழகிய இந்த மழைக்காக என்னுடைய உரையை சிறிதாக முடித்துக் கொள்ளப் போகின்றேன்.
உங்கள் அனைவரையும், அட்மிரல், ஓகொய்ன், கப்டன் ஹிக்கின்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ் புளுரிட்ஜ் ஊழியர்கள் அனைவரையும் நான் வரவேற்கின்றேன்.
என்னுடைய தாய் நகரமான வெர்ஜினியாவின், சார்லோட்ஸ்வில் அருகில் உள்ள மலைத் தொடர்களின் காரணமாக புளு ரிட்ஜ் என்ற பெயர் இந்த கப்பலுக்கு இடப்பட்டுள்ளது.
எனவே, என்னுடைய தாய் நகரம் தொடர்பான 20,000 தொன்கள் எடையுள்ள நினைவுகளை இந்த இந்து சமுத்திரத்திற்கு சுமந்து கொண்டு வந்தமைக்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த புளு பிரிட்ஜ் மாலுமிகள் குறித்தும் நான் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகள் சொல்ல விரும்புகின்றேன். ஐக்கிய அமெரிக்காவின் பல பகுதிகளையும் சேர்ந்தவர்கள் இதில் உள்ளனர்.
அவர்கள் 18, 19, 20 வயதினராவர். அவர்களுடைய பெற்றோரும், பெற்றோரின் பெற்றோரும் உலகின் பல பாகங்களில் இருந்து வந்தவர்கள். கப்பல் ஊழியர்களைப் போல அவர்கள் ஐக்கியமானவர்கள். சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் விடுதலை போன்ற அமெரிக்க விழுமியங்களுக்காக அவர்கள் அர்ப்பணிப்புடன் உள்ளனர். அவர்களுடன் பழகுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்த எம்மைப் போன்றவர்களுக்கு அவர்களை இங்கு பார்ப்பதும், இந்ததுறைமுகத்தில் அவர்களுடைய விஜயம் குறித்து மகிழ்வதும் உண்மையில் உற்சாகம் தரும் விடயமாகும்.
கடந்த ஐந்து வருடங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது கப்பல் இதுவாகும்.
இந்த கப்பலை இங்கு காண்பது எமக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. அடுத்து வரப்போகின்ற பல கப்பல்களில் இது முதலாவதாக இருக்கும் என நாம் நம்புகின்றோம். கௌரவ சபாநாயகர், கௌரவ வெளிவிவகார அமைச்சர் மற்றும் அட்மிரல், தூதுவர் காரியவசம் அவர்களை இங்கு காண்பதும் மிகுந்த கௌரவத்தை தருகின்றது.
கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் 17ஆம் திகதிகளில் நடைபெற்ற இரண்டு தேர்தல்களில் இலங்கை வாக்காளர்கள் வாக்களித்த விழுமியங்களை நாம் மதிப்பதனால் மற்றும் அங்கீகரிப்பதனால் இந்த கப்பல் இன்று இங்கு வந்திருக்கின்றது. தமது நாடு நல்லிணக்கமான,சமாதானமான, ஐக்கியமான, செழிப்பான மற்றும் ஜனநாயக சுதந்திரம் கொண்ட மற்றும் இந்துபசுபிக் பிராந்தியம் முழுமைக்கும் நிலைபேற்றினையும், வளர்ச்சியையும் தரும் தூணாக இருக்கவேண்டும் என்கிற இலண்ங்கை மக்களின் தொலைநோக்கினை நாம் வரவேற்கின்றோம்.
இலண்ங்கை மக்கள் மற்றும் அமெரிக்க மக்களின் தொலைநோக்கு பரிமாற்றக் கூடியதாக இருப்பதனை நா வரவேற்கின்றோம்.
41 வருடங்களுக்குப் பின்னரான அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் முதலாவது விஜயமாக,கடந்த வருடம் மே மாதம் இலங்கைக்கு வருகை தந்த ஜோன் கெர்ரி அவர்கள், இலங்கை மக்கள் மற்றும் இலண்ங் கை வாக்காளர்களின் தொலைநோக்கினை நாம் ஆதரிக்கின்றோம் என்றார்.
இந்த கப்பல் விஜயத்தின் ஊடாக, மில்லெனியம் சாலன்ஜ் கோப்பரேசன் ஊடாக, பல்வேறு சிரேஷ்ட அமெரிக்க அதிகாரிகளின் விஜயங்கள் ஊடாக, மற்றும் உங்கள் அனைவரதும் பிரசன்னத்தின் மூலம் அதனை செய்கின்றோம்.
எனவே, நீங்கள் அனுமதித்தால் இங்கு மேடையில் உள்ளவர்கள் மற்றும் உங்கள் அனைவர் சார்பிலும் இந்த நிகழ்வை ஆரம்பிக்கின்றேன். எமது இரு நாடுகளினதும், ஒட்டுமொத்த உலகின் நலனிற்காகவும், அமெரிக்கா மற்றும் இலங்கை நட்புக்காக நான் பிரார்த்தனை செய்கின்றேன்.
உங்கள் அனைவருக்கும் நன்றி!

