நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டை விளக்கமறியலில் முடிந்தது..!

எப்.முபாரக்-
திருகோணமலை பிரதேசத்தில் ஒருவரை அடித்து காயப்படுத்திய நபர் ஒருவரை இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா இன்று திங்கட்கிழமை (14)உத்தரவிட்டார். 

திருகோணமலை, ஆனந்தபுரி, பகுதியைச் சேர்ந்த 27வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் போது குறித்த சந்தேகநபர் மற்றொருவரை பொல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்து இன்று (14) பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -