ஹிக்கடுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஹிக்கடுவ அம்பேகம சந்தியில் இன்று மாலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹிக்கடுவ கலுபே பிரதேசத்தில் வசித்து வரும் களு என்பவர் சம்பவத்தில் காயமடைந்துள்ளார். காயமடைந்த களு என்பவர் காலி கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் மரண வீடொன்றுக்கு சென்று கொண்டிருக்கையில் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பெத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
