ஹக்கீம் பற்றி பொய்யான தகவல்கள் வழங்கியதனாலேயே பாரிய ஊழல் ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று ஆங்கிலப் பத்திரிகைக்கும் வேறு சில இலத்திரணியல் ஊடகங்களுக்கும் அமைச்சர் ஹக்கீம் முன்னர் நீதி அமைச்சராக இருந்தபோது உலக வர்த்தக மையத்தில் நீதி அமைச்சின் தேவைகளுக்காக ஒரு அலுவலகம் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி இல்லாமல் கட்டிடம் பெற்றுக்கொண்டதாக தவறான தகவல்களை லெசில் டி சில்வா வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
என்றாலும் இக்கட்டிடத்தை அமைச்சரவை அங்கீகாரத்துடனே அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சுக்கு பெற்றுக்கொடுத்ததாக அமைச்சரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சுமார் 15 வருட கால அமைச்சு நிர்வாக அனுபவமுள்ள தன்னை தன்மீது வீணான அவதூறுகளை கட்டவிழ்த்தி விடும் சில விசமிகளின் முயற்சிகளே இது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாரிய ஊழல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து லெசில் டி சில்வா இன்று திடீர் என பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பில் ஜனாதிபதி கையொப்பத்துடனான கடிதம் தனக்கு கிடைக்கப்பெற்றதாகவும், தான் என்ன காரணத்திற்காக பதவி விலக்கப்பட்டேன் என்ற விடயம் தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் லெசில் டி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட செய்தி தொடர்பில் மேலதிக சரியான விபரம் நாளை பதிவிடப்படும்.
குறிப்பிட்ட செய்தி தொடர்பில் மேலதிக சரியான விபரம் நாளை பதிவிடப்படும்.
