அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட் டுள்ளதான 2500 ரூபா சம்பள அதிகரிப்பை மார்ச் மாதத்தில் அடிப்படைச் சம்பளத்துடன் இணைப்பதற்கான ஏற்பாடுகள் நிறை வடைந்திருப்பதாகவும் அது தொடர்பிலான சுற்று நிருபம் வெளியாகியிருப்பதாகவும் பொதுநிர்வாக மற்றும் அரச முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு 26/02/2016 அமைச்சில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச சேவையினை பலப்படுத்தும் முகமாக நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு 26/02/2016 அமைச்சில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச சேவையினை பலப்படுத்தும் முகமாக நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.
இதனடிப்படையிலேயே தேசிய அரசாங்கத்தின் நூறு நாள் அபிவிருத்தி செயற்பாடுகளில் உறுதியளித்ததன்படி அரச சேவையாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தில பத்தாயிரம் ரூபாவினை மேலதிக கொடுப்பனவாக வழங்கியிருந்தது.
இதுவரைகாலமும் அரச சேவையாளர்களுக்கான அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படாது மேலதிக கொடுப்பனவுகளே வழங்கப்பட்டு வந்துள்ளன
தேசிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் மேலதிக கொடுப்பனவாக 10000 ரூபாவினை வழங்கியிருந்தது.
ஆயினும் மேற்குறித்த கொடுப்பனவு அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படாமலிருந்தது. இதனடிப்படையில் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அரசாங்கத்தின் வரவு – செலவுத்திட்டத்தில் குறித்த கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மேலும் அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் அரச சேவையாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் 2500 ரூபா மேலதிக கொடுப்பனவை இணைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அரச சேவையாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவான 10,000 ரூபா ஐந்து கட்டங்களாக அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படவுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நன்றியை தெரிவிக்கின்றோம் என்றார்.
சுற்றுநிருபத்தைப் பார்வையிடுவதற்கு:
http://www.pubad.gov.lk/