இலங்கை கல்வி நிர்வாக சேவை 111ஆம் வகுப்புக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு...!

எப்.முபாரக்-
லங்கை கல்வி நிர்வாக சேவை தொழிற் சங்கத்தினால் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் செய்த வேண்டுகோளுக்கு அமைய கல்வி நிர்வாக சேவையின் III ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் 2016 மார்ச் மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2016 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி வரை விண்ணயப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரச சேவை ஆணைக் குழுவின் அனுமதியுடன் இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறேஇ இதற்கு முன்னர் பிரமாணக் குறிப்புகளுக்கு அமைய கல்வி நிர்வாக சேவை பரீட்சைக்குத் தோற்றிய தடவைகள் பற்றி கணக்கில் எடுக்காததுடன்இ புதிய பிரமாணக் குறிப்புகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு இரண்டு தடவைகள் தோன்ற முடியும். அவ்வாறே, வயது அளவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் வேண்டுகோளின்படி திருத்தப்பட்டுள்ளது.

அதற்கு அமைய திறந்த போட்டிப் பரீட்சைக்கு உச்ச வயது வரம்பு 30 இல் இருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு உச்ச வயது வரம்பு 55 இல் இருந்து 58 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி இதுவரை பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற இளம் வயதினரும், ஆசிரிய சேவையின் பெருந்தொகையினரும், அதிபர் சேவை 1 ஆம் தரத்தில் 58 வயதுவரையுள்ள பெரும்பாலோரும் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கல்வி அமைச்சரால் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்த வாய்ப்பு தொடர்பில் இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழிற் சங்கம் உட்பட கல்விப் புலத்தின் அனைத்து தொழிற் சங்கங்களும் கல்வி அமைச்சருக்குத் தங்களின் நன்றியைத் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -