மாஸ் மற்றும் ஸ்னிகர்ஸ் சொக்கலேட்டை விரும்பி உண்பவரா நீங்கள்..? அவதானம்

பிரபல சொக்கலேட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இலங்கை உள்ளிட்ட நாடுகளிற்கு விற்பனை செய்த, தமது தயாரிப்புக்களை மீளப்பெறவுள்ளன. 

மாஸ் மற்றும் ஸ்னிகர்ஸ் (Mars and Snickers) செக்கலேட்களையே இவ்வாறு மீளப் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் ஜேர்மன் நாட்டில், நுகரப்பட்ட ஸ்னிகர் சொக்கலேட் பாரில் சிவப்பு நிற பிளாஸ்டிக் துண்டு காணப்பட்டமையே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. 

இதன்படி இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட மில்லியன் கணக்கான சொக்கலேட் பார்கள் பாதுகாப்பு அற்றவையாக இருக்கலாம் என, கூறப்படுகின்றது. 

இதேவேளை, உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக, தெர்லாந்தின் மார்ஸ் கூட்டுறவு விவகார இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த தயாரிப்பு வரிசையில் உருவாக்கப்பட்ட ஏனைய சொக்கலேட்களிலும் இவ்வாறான பிளாஸ்டிக் துண்டுகள் இருக்குமா என்பது தொடர்பில் உறுதியாக கூறமுடியாதுள்ளது எனவும், அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -