பதுளையில் ஏட்டிக்குப்போட்டியான கண்டன ஆர்ப்பாட்டத்தினால் பதுளை அரசினர் மருத்துவ மனை வளவில் பெறும் பதட்டமும், பரபரப்பும்







க.கிஷாந்தன்-

பதுளையில் 23.02.2016 அன்று இடம்பெற்ற ஏட்டிக்குப்போட்டியான கண்டன ஆர்ப்பாட்டத்தினால் பதுளை அரசினர் மருத்துவ மனை வளவில் பெறும்  பதட்டமும், பரபரப்பும் காணப்பட்டது.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தொலைத்தொர்பு டிஜிட்டல் அபிவிருத்தி அமைச்சருமான  ஹரின் பெர்னாண்டோ அரச வைத்தியர்களை “ஜடையா” என்று அநாகரீகமான வார்தை பிரயோகங்களை பிரயோகித்தமையை கண்டித்து, சுமார் 500கும் அதிகமான வைத்தியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

பகல் 12 மணிமுதல் 1 மணிவரையிலான மதிய உணவு வேளை நேரத்தில் நடைபெற்ற வைத்தியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட மற்றும் ஒரு ஆர்ப்பாட்டம் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

நடாத்தப்பட்ட எதிரப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சுமார் ஒரு மணித்தியாலம் பதுளை ஹாலிஎல பிரதான வீதியினூடான போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமும், கலவர நிலையும், பதட்டமான சூழலும் காணப்பட்டன.

அந் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக, பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டதோடு பரஸ்பர மோதல்களை தவிர்ப்பதற்கு வீதியின் இரு மறுங்கிலும் பொலிசாரின் வாகனம் நிறத்தப்பட்டிருந்ததோடு, கலகம் தடுக்கும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தயார் நிலையில் வைகப்பட்டு இருந்தனர்.

வைத்தியர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக பதுளை வைத்தியசாலை வளாகம் எங்கும் கறுப்பு கொடிகளும், கறுப்பு பதாதைகளும்  பறக்கவிடப்பட்டிருந்தன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -