சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மீரா எஸ் இஸ்ஸடீன்,ஏ.எல்.எம்.சலீம் ஆகியோருக்கு “சமாதானத் தூதுவர்” விருது

பி.எம்.எம்.ஏ.காதர்-

லங்கை சமாதானக் கற்கைள் நிலையத்தினால் ';சிரேஷ்ட ஊடகவியலாளர்களான அக்கரைப்பற்று மீரா எஸ் இஸ்ஸடீன், நிந்தவூர் ஏ.எல்.எம்.சலீம்; ஆகியோர் 2016ஆம் ஆண்டுக்கான 'சமாதானத் தூதுவர்'விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். 

இந்த விருது வழங்கும் நிகழ்வு இலங்கை சமாதானக் கற்கைள் நிலையத்தின் சம்மாந்துறை அலுவலகத்தில் இன்று (20-02-2016)சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன் போது இலங்கை சமாதானக் கற்கைள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் இந்த 'சமாதானத் தூதுவர்' விருதை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

ஊடகத்துறையின் மூலம் இன நல்லுறவுக்கும்,சமாதானத்திற்கும் நீண்ட காலமாக இவர்கள் ஆற்றிவரும் பெரும் பங்களிப்புக்காகவே இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,எம்.ஐ.ஏ.பரீட், வர்த்தகர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -