ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கிழக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு..!

ரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி போல் கோட்பெரி Mr.Paul Godfrey இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்டை திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள முதலமைச்சு அலுவலகத்தில் இன்று 15.02.2016 உத்தியோக பூர்வ சந்திப்பினை மேற்கொண்டார் .

இதன் போது கிழக்குமாகாண ம் தொடர்பாக வரிவான கலந்துரையாடல் ஓன்று இடம் பெற்றது அதனை தொடர்ந்து ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் நசீர் அஹமட் மிக முக்கிய விடயமாக கிழக்குமாகாண மீள் குடியேற்றம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாகவும் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த சூழ் நிலையினால் சொந்த இருப்பிடங்களை இழந்து வாழ்கின்ற மக்களின் மீள் குடியேற்றத்தினை நிவர்த்தி செய்து வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களினை முனடுத்து செல்வது தொடர்பாகவும் கிழக்குமாகாணத்தில் இன்று உள்ள சிறந்த ஆட்சி மூலம் மக்களுக்கிடையிலான இன நல்லுறவினை கட்டிஎலுப்பி சிறந்த ஒரு சமூகத்தினை உருவாக்குவது சம்மந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது .

மேலும்ம் கிழக்குமாகனத்தில் உள்ள உள்லூராட்சி மன்றங்களின் இன்றைய நிலையினை சுட்டிக்காட்டி அதன் நிலையினை மாற்றி பாரிய அபிவிருத்தி திட்டங்களை உள்ளூராட்சி சபைகள் மூலம் முன் எடுத்து அதற்க்கான நிதியினை திரட்டுவது இத்திட்டத்திற்காக எங்கிருந்து அதிகளவான பெற்று மக்களின் வாழ்வாதார இயல்பு நிலையினை முனேற்ற பாதைக்கு கொண்டு சென்று வாழ்வின் அபிவிருத்தியில் ஐரோப்பிய யூனியனும் முழுமையான பங்களிப்பினை வழங்க உள்ளதாகவும் கிழக்குமாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் ஊடகங்களுக்கு தெரிவித்தார் .






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -