காத்தான்குடி : ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியினை மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் பார்வை இட்டார்...!

புதிய காத்தான்குடி முஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் வீதி பலவருட காலமாக சீர் செய்யப்படாமல் இருந்தமையினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர், எனவே காத்தான்குடி நகரசபையினால் இவ்வீதியினை சம்பூர்ணமாக செப்பனிடுவதற்காக பத்துலட்சம் ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு அதன் வேலைகள் முடிவடைந்துள்ளது. 

இவ்வீதியின் தரத்தினையும், ஒழுங்கமைப்பையும் பரிசோதிற்பதற்காகவும், பார்வை இடுவதற்காகவும் திடீர் விஜயம் ஒன்றினை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இன்று (15.02.2016) மேற்கொண்டார். அதன்போது அவ்வீதியின் சில பகுதிகளில் நீர்வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதனையும், மழை மக்களின் வீடுகளுக்குள்ளும் சென்று இருப்பதனையும் கண்ணுற்ற அவர், அதனை அழகிய முறையில் நீர் வடிதோட கூடிய வகையில் மேற்பரப்பு வாடிகான் அமைத்து சீர்செய்யும் படியும், தாழ்வாக இருந்த பகுதியினை மீண்டும் தார் இட்டு செப்பனிடும் படியும் காத்தான்குடி நகரசபையின் தொழிநுட்ப உத்தியோகஸ்தரிடமும். அதற்குரிய அதிகாரிகளிடமும் ஆலோசனை வழங்கியதுடன் அதனை சீர்செய்து கொடுக்கும்படி பணிப்புரை விடுத்தார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -