ஊர் போற்றும் உயர்தர வித்துகள் விழா..!

எம்.ஜே.எம்.சஜீத்-
ல்வி துறை அபிவிருத்தியடையந்து இக்கிராமத்து மாணவர்கள் முன்னேறி இப்பிராந்தியத்தையும் முன்னேற்றுவதுடன் எதிர்காலத்தில் ஏனைய இப்பிரதேச மாணவர்களையும் கல்வி வளர்ச்சிகாக ஊக்குவிக்க வேண்டும் என தென்கிழக்கு பல்கலை கழகத்தின் உபவேந்தர் பேராசியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

ஒலுவில் ஜம்இய்யதுல் புர்கான் வாலிபர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2015 ஆம் ஆண்டு கல்வி பொதுதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலை கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களை திறந்த வெளியில் பாராட்டி கௌரவிக்கும் பிரமாண்டமான ஊர் போற்றும் உயர்தர வித்துகள் விழா ஜம்இய்யதுல் புர்கான் வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் பொறியியலாளர் ஐ.எல். ஹைதர் அலி தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் தென் கிழக்கு பல்கலை கழகத்தின் உபவேந்தர் பேராசியர் எம்.எம்.எம். நாஜிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலை கழகத்திற்கு தெரிவான மாணவர்கள்...

மருத்துவ துறைக்கு 02 மாணவர்களும் 
01. வஸிர் ஹஸான் அஸ்ரப், 
02. தாஜுத்தின் முகம்மட் பௌவாஸ்,

பொறியியல் துறைக்கு 03 மாணவர்களும்,
01. ஏ.ஜி. முஜிபுர் ரஹஜமான்.
02. எஸ்.ஹுஸ்னி பாரிஜ்.
03. வஹாப்தின் நிஜாஸ்.

வர்த்தக துறைக்கு 02 மாணவர்களும்,
01. எஸ்.சுரையிஜ் அஹமட்.
02. எம்.என். பாத்திமா றுஸ்தா.

கலை துறைக்கு 05 மாணவர்களும்,
01. எம்.எம்.பாத்திமா ஹுஸ்னா.
02. டி.எம். முபாஸ்.
03. எஸ்.எல். இஸ்ரத் அலி.
04. ஏ.என். நுஸ்தா.
05. கே.கைறுன் நிஸா.

ஆகிய மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்று பல்கலை கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்கள்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ. அஸிஸ், முல்லைதீவு மாவட்ட நீதவான் எம்.எஸ்.எம். சம்சுத்தின், அக்கறைப்பற்று வலய கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசிம், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ், அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம் ஜெமில் உட்பட கல்வி மாண்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -