கட்டார் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் ஹாஜி..!

த்தார் தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு கத்தார் வாழ் ஏறாவூர் மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் மாலை வரை பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் மைதர் விளையாட்டுமைதானத்தில் கத்தார் வாழ் ஏறாவூர் மக்கள் அமைப்பினரின் நிர்வாகத்தின் நெறிப்படுத்தலில் விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முன்னாள் தேசிய கொள்கைபரப்பு செயலாளருமான மாகாணசபை உறுப்பினர் அல் -ஹாஜ் MSS . சுபைர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியீற்றிய வீரர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார். 

இங்கு மாகாணசபை உறுப்பினர் அல் -ஹாஜ் MSS . சுபைர் அவர்கள் வெளிநாட்டில் நமது மக்களின் நிலைகளை பற்றியும் நாட்டின் தற்போதைய முஸ்லிம் தலைமைகளின் போக்கினை பற்றியும் சிறப்பாக விளக்கவுரை ஒன்றினை நிகழ்த்தினார் . இந்நிகழ்வில் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
சஜா. எம். அனைஸ்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -