இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் அவர்கள், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லீம் விவாகரங்களுக்கான அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் இமாம் மௌலவி எம்.எஸ்.எம். தஸ்லீம் அவர்களுடன் இணைந்து கொழும்பில் அமைந்துள்ள சரித்திரப் பிரசித்திப் பெற்ற பெரிய பள்ளிவாயிலுக்கு நேற்று (பெப்ரவரி 11) மாலை சுற்றிப் பார்த்தார்.
பள்ளிவாயிலின் தனித்துவமான வரலாறு மற்றும் விசேட அம்சங்கள் குறித்து பள்ளிவாயிலின் பொதுச் செயலாளர் எம். தௌபீக் அவர்கள் தூதுவர் கேஷப் அவர்களுக்கு விளக்கமளித்தார். இந்த விஜயம் தொடர்பில் முஸ்லீம் தலைவர்களுக்கு தூதுவர் தமது நன்றிகளை பகிர்ந்து கொண்டார்.
'இங்கு வருகை செய்து பெரிய பள்ளிவாயிலின் வரலாற்றினை மாத்திரமின்றி, இலங்கையில் 1200 வருடங்கள் பழமையான வரலாற்றினை அறிந்து கொண்டமை மிகுந்த மகிழ்ச்சியைத தருகின்றது' என அமெரிக்கத் தூதுவர் கேஷப் அவர்கள் தெரிவித்தார்.
