|
முதலமைச்சருக்கு எதிரான மொட்டைக் கடிதத்திற்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்களே பொறுப்பு என்னும் கருத்திலான செய்திகள் இணைய ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
குறித்த விடயம் பிழையனாதும், மாகாணசபை உறுப்பினர் தொடர்பிலான செய்தியினை திருபுபடுத்தி உண்மைக்குப் புறம்பாக எழுதப்பட்ட செய்தி என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வடக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சரின் மீது ஊழல் மோசடிக் குற்ற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு தற்போது விரிவான விசாரணைக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன, இந்த நிலையில் அது தொடர்பிலான கடுமையான வாதப்பிரதிவாதங்கள் 25-2-2016 அன்றைய சபை அமர்வில் இடம்பெற்றன, அந்த சந்தர்ப்பத்தில் குறித்த விவாதத்தினை திசைதிருப்ப முனைந்த ஒரு உறுப்பினர் முதலமைச்சருக்கு எதிரான கடிதம் ஒன்றில் கையெழுத்திடுமாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டார் என்று குறிப்பிட்டார்.
இதனால் விவசாய அமைச்சருக்கு எதிரான வாதம் திசைதிருப்பபப்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. இதனை அறிந்துகொண்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் நான் எந்தக் கடிதத்தில் கையெழுத்து வாங்க முற்பட்டேன் என்பதை கௌரவ உறுப்பினர் சிவனேசன் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டார்.
அதற்கு உறுப்பினர் சிவனேசன் அவர்கள்: தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு முதலமைச்சர் தலைமை தாங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்திலேயே உறுப்பினர் அஸ்மின் அவர்கள் கையெழுத்து இடுமாறு கேட்டுக்கொண்டார்; இப்போது நடக்கின்ற விவாதத்திற்கும் அந்தக் கடிதத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்டார் வடக்கு மாகாணசபை உறுப்பினர். இதுவே குறித்த சபையில் நடைபெற்ற கருத்தாடல்களாகும் (மேற்படி செய்தியோடு இணைக்கப்பட்டுள்ள வீடியோவை அல்லது சபையின் உத்தியோகபூர்வ அறிக்கையைப் பார்த்தால் உண்மையை அறிந்துகொள்ள முடியும்.
குறித்த கடித்தத்த்இல் 23 ஆளும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு முதலமைச்சருக்குக் கையளித்தமை பகிரங்கமாக யாவரும் அறிந்த விடயமே. மேற்படி செய்தியை வழங்கியவர்கள் வாசகர்களை பிழையாக வழிநடாத்த முற்படுகின்றமை இது முதற்தடவையல்ல.
இனிவரும் காலங்களிலாவது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செய்திகளை எழுதாமல் மக்கள் உண்மையை அறிந்து கொள்வதற்காக செய்திகளை எழுதுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
