புல்மோட்டையின் முதலாவது நூருல் ஹுதா பெண்கள் அரபிக் கல்லூரி கண்ணியத்துக்குரிய மௌலானா செய்து அப்துல்லாஹ் கோயா தங்கள் அல்ஹசனி வல் ஹுசைனி அவர்களின் தலைமையில் 28.02.2016 ம் திகதி பி.ப. மணியளவில் புல்மோட்டை 4 ம் பிரிவில் கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் பங்குபற்றுதலுடன் திரை நீக்கம்செய்ததுடன் குறித்த கல்லூரிக்கு பிளாஸ்டிக் கதிரைகளும் வழங்கிவைத்தார்
குறித்த நிகழ்வுக்கு புல்மோட்டை பெரிய பள்ளிவாயலின் தலைவர் கலீல்லெப்பை,புல்மோட்டை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி,புல்மோட்டை தள வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் சுதாகர்,திருகோணமலை தள வைத்தியசாலையின் வைத்தியர் இர்ஷாத்,புல்மோட்டை பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வைபவரீதியாக திறந்துவைத்தனர்






