ஆனந்த தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை..!

நாரஹேன்பிட்டிய – அபயராம விகாரை அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றமைக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கிருலப்பனை ஸ்ரீபூர்வராம விகாராதிபதி விமலஞான தேரரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மாவட்ட பிரதான நீதவான், ரி.வி. குணசேகர முருத்தெட்டுவே ஆனந்த தேரரை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளார்.

நாரஹேன்பிட்டிய அபயராம விகாரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -