ஆபாச படம் காட்டி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது..!

நாகர்கோவில் தாலுகா ஆரல்வாய்மொழி அருகே உள்ளது சீதப்பால்.அங்கு உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை சுப்பையன் (52) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அவர் அந்த பள்ளியில் படித்துவந்த 5ம் வகுப்பு மாணவிகள் அழைத்து, செல்போனில் ஆபாச படம் காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இது குறித்து தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து பள்ளிக்கு சென்று போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து தலைமை ஆசிரியர் தலைமறைவானார்.

இந்நிலையில் மாணவியின் தாயார் நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் சுப்பையன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி மற்றும் தொடக்கக் கல்வி அதிகாரி விசாரணை நடத்தினர். இதையடுத்து தலைமை ஆசிரியர் சுப்பையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -