யுத்தக்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரதமர் ரணிலின் முடிவு..!

யுத்தக்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசத்தின் பங்களிப்பினை முழுமையாக நிராகரிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யுத்தக்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசத்தின் பங்களிப்பினை முழுமையாக நிராகரிக்க முடியாது. எனினும், இதுதொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உள்ளக நீதி கட்டமைப்பின் ஊடாகவே முன்னெடுக்கப்படும்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களின் உயிழப்பிற்கு காரணமான இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

எனினும் பொதுமக்கள் யாரால் கொல்லப்பட்டார்கள், எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பிலான துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது.

அத்துடன், இதுதொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க மனித உரிமை அமைப்புக்கள் பங்கேற்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழப்புக்களுக்கு யார் காரணம், அவர்களுக்கான தண்டனை நிர்ணயம் என்பன குறித்த இறுதித் தீர்மானம் உள்ளக நீதிமன்றப் பொறிமுறைமையின் ஊடாகவே மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.- See more at: http://athavansrilanka.com/?post_type=post&p=313114#sthash.mRW9HvgO.dpuf
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -