ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நீக்கப்பட்டுள்ளார்.
கொட்டிகாவத்த - முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சிக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நியமனத்தை இன்று மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் தெஹிவளை, கல்கிஸ்ஸ பிரதேச அமைப்பாளராக கீர்த்தி உடவத்தையும், தெல்தெனிய தொகுதி அமைப்பாளராக அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்கவும், மீரிகம தொகுதி அமைப்பாளராக ருவன் குணதுங்கவும் ஜனாதிபதியினால் இன்று நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
