இந்திய மீனவர்களின் நடவடிக்கை வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது- தினேஸ்

க.கிஷாந்தன்-

வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இவற்றிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது நல்லாட்சி அரசு கைகட்டி பார்க்கிறது என ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் ஜக்கிய முன்னணியின் தலைவருமான தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் மலையகத்தில் அட்டன் – கினிகத்தேனை பிரதேசத்தில் 27.02.2016 அன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

இந்தியாவின் முன்னால் பிரதமர் திருமதி. இந்திராகாந்திக்கும் இலங்கையின் முன்னால் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆகியோருக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பின்னர் கடற்துறைசார் பொருளாதாரத்தில் இலங்கை வளர்ச்சி காண ஆரம்பித்தது. ஆனால் இன்று இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவி இழுவை படகுகள் மூலம் கடல் கீழ் மட்டத்திலிருந்து கடல் வளங்களை முழுமையாக அறுவடை செய்கின்றார்கள்.

இதனால் வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் ஒரு அசமந்த போக்கை கடைபிடித்து வருகின்றது என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -