உலக வரலாற்றில் பாகிஸ்தான் பாராளுமன்றம் புதிய சாதனை..!

முழுக்க முழுக்க சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் முதல் நாடாளுமன்றம் என்ற பெருமையை பாகிஸ்தான் நாடாளுமன்றம் பெற்றுள்ளது. சீனா அளித்த 5.5 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.800 கோடி) நிதியுதவியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற எளிமை யான நிகழ்ச்சியில், பிரதமர் நவாஸ் ஷெரீப் சூரிய சக்தி (சோலார்) மின்சார இணைப்பு கொண்ட நாடாளுமன்ற வளாகத்தை இயக்கி வைத்தார். கடந்த 2014-ம் ஆண்டு இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

“சுதந்திரத்துக்குப் பிறகு நாடாளுமன்ற வளாகம் மின் தேவையில் சூரிய சக்தி மூலம் தன்னிறைவு அடைந்திருப்பது இதுவே முதல் முறை. தனியார், பொது உள்ளிட்ட பிற நிறுவனங் களும் இதனைப் பின்பற்ற வேண்டும்” என நவாஸ் தனது உரையில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின்போது, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

“இத்திட்டம் சீனா-பாகிஸ் தானின் நட்புக்கு மற்றுமொரு உதாரணம்” என பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி யில், பாகிஸ்தானுக்கான சீன தூதர் பங்கேற்றார்.

நாடாளுமன்ற பேரவைத் தலைவர் ஆயாஸ் சாதிக் கூறும்போது, “இந்த சூரிய சக்தி தகடுகள் 80 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். நாடாளுமன்ற வளாகத்துக்கு 62 மெகாவாட் போதுமானது. எஞ்சிய 18 மெகாவாட் தேசிய வலையமைவுக்கு அளிக்கப்படும்” என தெரிவித்தார்.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததன்மூலம், உலகிலேயே முழுக்கமுழுக்க சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கும் முதல் நாடாளுமன்ற வளாகம் என்ற பெருமையை பாகிஸ்தான் நாடாளுமன்றம் பெற்றுள்ளது.

இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடு களின் நாடாளுமன்றங்கள் பகுதி அளவு சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்குகின்றன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -