சவூதி அரேபியாவில் தனது எஜமானியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது இந்த வருடத்தில் சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட 64 ஆவது மரண தண்டனை நிறைவேற்றமாகும்.
குறிப்பிட்ட பெண்ணிடம் சாரதியாக கடமையாற்றிய முப்றிஹ் பின் அஹ்மெட் காமிஸ் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முப்றிஹ் தனது எஜமானியிடமிருந்து பணத்தையும் கையடக்கத் தொலைபேசியையும் களவாடிய பின்னர் அவரது கைகளுக்கு விலங்கிட்டு அவரது வாயை ஒட்டு நாடாவால் ஒட்டி தனிமையான இடத்திற்கு காரில் கடத்திக் கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.
தொடர்ந்து காமிஸ் அந்த எஜமானியையும் அவரது குழந்தையையும் கைவிட்டு சென்றுள்ளார்.
