தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு மத்திய, வட மத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின் அபிவிருத்தி அமைச்சு வழங்கப்படவுள்ளது.
இதற்கான அமைச்சராக எதிர்வரும் வியாழன் அல்லது சனிக்கிழமை அவர் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த அமைச்சின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் உருவாக்கப்பட்ட மஹாவலி அபிவிருத்தி அதிகார சபையும் உள்வாங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதம் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த அமைச்சுப் பதவி தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாகவும் அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். DC
