முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் உருவாகவுள்ள புதிய கட்சியின் உருவாக்கத்தை தடுக்கவும், அரசியல் பழிவாங்கல்களுக்குமே மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷவை கைதுசெய்துள்ளனர்.
அரச வளங்களை சூறையாடியதாக தொடர்ச்சியாக மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தும் நல்லாட்சி அரசானது இவற்றில் உண்மைத்தன்மை காணப்படுமாயின் அவரை கைது செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார்.
யோஷித்தவின் கைது தொடர்பில் அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சருடனும் பகிரங்க விவாதத்திற்கு நான் தயாராக என சவால் விடுக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவருமான உதய கம்பன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
