போதைப் பொருள் விற்பனை தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெலே சுதா என்ற சமந்த குமார சிறையில் இருந்தவாறு தொடர்ந்தும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் அவர் தொலைபேசி மூலமாக ஹெரோயின் வியாபாரிகளுடன் கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டியவுக்கு அறிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக களுத்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரங்க சம்பத் என்பவரிடம் வாக்குமூலம் பெறவும் புலனாய்வு பிரிவினர் அனுமதி கோரியுள்ள நிலையில் அதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
