07 பேரின் உறுப்புரிமையை உடனடியாக இரத்து செய்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி...!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் 07 பேரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.  அத்துடன் குறித்த 07 பேருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. 

இன்று (12) பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கட்சியின் தலைமையகத்தில் கூடியிருந்த போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக தனித்து செயற்படுவதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -