2015 ஆம் ஆண்டில் நூலாக்கம் செய்யப்பட்ட நூல்களின் வெளியீட்டு விழா






நிஸ்மி-

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2015 ஆம் ஆண்டில் நூலாக்கம் செய்யப்பட்ட நூல்களின் வெளியீட்டு விழா நேற்று (18) வியாழக்கிழமை அக்கரைப்பற்று ரி.எப்.சி.மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக  அம்பாரை மேலதிக மாவட்டச் செயலாளர் அஷ்-ஷேய்க் எம்.ஐ.அமீர், அவர்கள் கலந்து கொண்டதோடு, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர்களான எம்.எஸ்.எம்.றஸ்ஸான், எம்.கஜேந்திரகுமார், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக்  ஆகியோர் கலந்து கொண்டதோடு எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட இலக்கியவாதிகள் கலந்து கொண்டனர்.

மாகாணப் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரத்னம் வெளியிடப்பட்ட நூல்களின் ஒரு தொகுதியை மேலதிக மாவட்டச் செயலாளர் அஷ்-ஷேய்க் எம்.ஐ.அமீர், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர்களான எம்.எஸ்.எம்.றஸ்ஸான், எம்.கஜேந்திரகுமார் கியோர்களுக்கு வழங்கி நூல்களை வெளியிட்டு வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -