அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான தேசியப்பட்ட்டியல் அந்த ஊருக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஜவாத் தெரிவித்தார்.
இம்போட் மிரர் ஊடகவலையமைப்பின் சர்வதேச சிகரம் வானொலியின் வாரம் வாரம் இடம்பெறும் அரசியல் களம் நிகழ்ச்சியில் சென்ற சனிக்கிழமை (16) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் ரசாக் அவர்கள் கலந்துகொண்டார். அங்கு கருத்து தெவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்க இருந்த தேசியப்பட்டியல் தொடர்பாக அலியார் ஹூசைன் என்ற நேயர் ஒருவர் கேள்வி கேட்டார் அதற்கு பதிளித்த கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஜவாத் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்க்கு வழங்கப்படவுள்ள தேசியபட்டியல் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் அதனை நானும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.
அதனை அட்டாளைச்சேனைக்கு தலைவர் வழங்குவார் எனவும் அது பாலமுனையில் நடைபெறவுள்ள தேசிய மாநாட்டிற்கு முன்னர் அது வழங்கப்பட வேண்டு, வழங்கப்படலாம் எனவும் நம்பிக்கை கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியலை தலைவர் அவர்கள் வழங்குவதற்கு முன்னர் அட்டாளைச்சேனை மக்கள் வழங்கும் அழுத்தம் காணாது இந்த ஊரில் உள்ள அரசியல் பிரமுகர்கள் கட்டாயம் தலைவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தர்.
