சவுதி அரேபியாவின் வேண்டுகோளை அடுத்து, அரபு லீகின் அவசரக் கூட்டம்..!

ரானிலுள்ள சவுதி தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விவாதிக்க இந்தக் கூட்டம் சவுதி அரேபியாவின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் அரபு லீகின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

சவுதி அரேபியா ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த மதகுரு ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜ உறவுகள் மோசமடைந்தன.

தெஹ்ரானிலுள்ள சவுதி தூதரகம் தாக்குதலுக்குள்ளானது.

ஈராக் மற்றும் லெபனான் போன்ற நாடுகள் இரானுக்கு ஆதரவளித்து வரும் நிலையில், இக்கூட்டத்தில் முடிவு ஏதும் ஏற்படுவதற்கு சிறிய அளவே வாய்ப்புகள் உள்ளன என்று கெய்ரோவிலுள்ள செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

சவுதி அரேபியாவின் நெருங்கிய நேச நாடுகள் கூட தமது முழுமையான ஆதரவை அந்நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை எனவும் அச்செய்தியாளர் தெரிவித்தார்.
BBC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -