முஸ்லிம் காங்கிரஸிற்கு ஒருபோதும் துரோகம் செய்யமாட்டேன் - ஹபீஸ் எம்.பி

பர்ஸான் முஹம்மட் -
ன்று முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் Dr.ஹபீஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணையவுள்ளதாக செய்தி ஒன்று இணைய தளங்களில் வெளியிடபட்டுள்ளது.

இது குறித்து டாக்டர் ஹபீஸ் Mp சற்றுமுன்னர் தெரிவித்ததாவது-

முஸ்லிம் காங்கிரஸ் என்னை நம்பி, எனக்கு தேசியப்பட்டியல் எம்.பி. பதவி வழங்கியது. அதனை உரிய வேளையில் ராஜினாமா செய்வேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

நான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணையப் போவதாக வந்த செய்தியை முற்றாக மறுக்கிறேன். அது ஒரு பொய்யான தகவல். ஒருபோதும் பல்டி அடித்து முஸ்லிம் காங்கிரஸிற்கு துரோகம் செய்யமாட்டேன்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறான தகவல் பரப்பப்படுகிறது. இவ்வாறான சித்து விளையாட்டுக்களுக்கு நான் ஒருபோதும் பலியாகிவிட மாட்டேன்.

எதிர்காலங்களிலும் கட்சித் தலைவருக்கும், கட்சிக்கும் முழு விசுவாசமாக செயற்படுவேன்.

பராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பாரளுமன்றத்திலும் பொது இடங்களிலும் அமைச்சர்களை சந்திக்க நேர்வதும் அவர்களுடன் நட்பாக உரையாடுவதும் என்பது பொதுவாக நடக்கும் ஒரு விடயம்.

நான் எந்த சந்தர்பத்திலும் கட்சியுடன் அதிருப்தியில் உள்ளதாகவோ கட்சி தாவ போவதாகவோ தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டார்.

குறித்த ஊடக செய்திகளில் வெளியாகியுள்ளது போல் அலறி மாளிகையில் வில்பத்து விடயத்தில் அமைச்சர் ஹக்கீம் மவுனமாக இருப்பது ஏன் என ஊடகவியளாலர்கள் என்னிடம் கேள்வி கேட்டதாகவும் நான் அதற்கு பதில் வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று எதுவும் நடக்கவில்லை என அவர் மேலும்குறிப்பிட்டர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -