கிழக்குக்கனவுகள்' எட்டுநாள் புத்தாண்டு விழா காரைதீவில்..!

காரைதீவு நிருபர்-
புதுவருடத்தையொட்டியும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் காரைதீவு பிரதேசசபை ஆதரவுடன் ஸ்ரீலங்கா லக்ஸ்டோ மீடியா நெற்வேர்க் ஏற்பாட்டில் காரைதீவில் எட்டு தினங்கள் 'கிழக்குக்கனவுகள்' எனும் மெகா கார்னிவல் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் 21ஆம்திகதி வரை காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டு மைதானத்தில் தினமும் மாலை 3மணி முதல் நள்ளிரவு வரை இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.

இம்மாபெரும் நிகழ்வில் கலைகலாசார வர்த்தகக்கண்காட்சி தொழில் வழிகாட்டல் மற்றும் இரத்ததான நிகழ்வு மிஸ்டர் மெஜிக் சாகச நிகழ்வுகள் மெரிக்கோரவுண்ட்ஸ் சிறுவர் நீர்த்தடாக படகுச்சவாரி வினோத நிகழ்ச்சிகளுடன் தினமும் இரவில் புகழ்பெற்ற பாடகர்கள் கலந்துகொள்ளும் மெகா இன்னிசை நிகழ்வும் இடம்பெறும் என ஏற்பாட்டாளர் மருதூர் அன்சார் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -