எப்.முபாரக்-
அனுமதிப்பத்திரமின்றி மின்சார மீற்றரில் திருட்டு வேலையை மேற்கொண்ட நபர் ஒருவரை இம்மாதம் 14ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற தீதிவான் ஹயான் மீ ஹககே திங்கட்கிழமை (11)உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த வாப்புத்தம்பி நஸிர் வயது(40)என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்றுப் பகுதியில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்சார மீற்றரில் தெரியாத வகையில் சூட்சகமான முறையில் சிறிய வகை கம்பியை பதித்து மின்சார மீற்றர் சுழழாத வகையில் வைத்திருந்த ஒருவரை திருகோணமலை மின்சார ஊழியர்களும், உப்புவெளி பொலிஸாரும் மேற்கொண்ட திடிர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (10) இரவு கைது செய்து உப்புவெளி பொலிஸார் சந்தேக நபரை திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
