சாய்ந்தமருது பிரதேச செயலக பாடசாலைக்கிடையில் சித்திரப் போட்டி..!

ஹாசிப் யாஸீன்-
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தின் இன்றைய இரண்டாம் நாள்கல்வி, உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள், இளைஞர் விவகார அமைச்சுகளுக்கான நிகழ்வுநாளாகும். 

இதனை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட் பட்ட பாடசாலைமாணவர்களுக்கிடையிலான சித்திரம் வரைதல் போட்டி சாய்ந்தமருது பிரதேச செயலத்தின்ஏற்பாட்டில் இன்று (26) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில்இடம்பெற்றது.

சித்திரப் போட்டியில் ஸாஹிரா கல்லூரி, அல்-ஜலால் வித்தியாலயம், மழ்ஹருஸ் ஸம்ஸ்மகா வித்தியாலயம், அல்-ஹிலால் வித்தியாலயம், விதாதா வள நிலையம், தொழிற் பயிற்சிநிலையம், இளைஞர் சேவை மன்றம், தையல் பயிற்சி நிலையம் ஆகியவற்றின் மாணவ,மாணவிகள் பங்குபற்றினார்கள்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை சாய்ந்தமருதுபிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர் உள்ளிட்டபிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகம், அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, விளையாட்டுத்துறைஅமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்திவாரம் 25ம் திகதியிலிருந்து எதிர்வரும் 30ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -