விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் : மைதிரி, தயாசிறி, ஹரீஸ் உடற்பயிற்சியில்

ஹாசிப் யாஸீன்-

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் இன்றுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் தேசிய ஆரம்ப நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வார நிகழ்வுகள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரின் தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது.

இதில் அமைச்சின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தின் நிகழ்வுகள் இன்றிலிருந்து 25 எதிர்வரும் 30ம் திகதி வரை தேசிய ரீதியில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -