பட்டதாரிகளை மாவட்டத்திற்குள் நியமிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை..!

ஹாசிப் யாஸீன்-
யிலுநர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கொழும்பு பிரதேசத்தில் நியமிக்கப்பட்டுள்ளஅம்பாறை மாவட்ட பட்டதாரிகளை சொந்த மாவட்டத்தில் நியமிக்க விளையாட்டுத்துறைபிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை எடுக்கவுள்ளார்.

அம்பாறை மாவட்ட பட்டதாரிகளுக்கு பயிலுநர் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்நியமனம் நேற்று முந்தினம் அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

இதில் நியமனம் பெற்றுள்ள அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் கொழும்பு மற்றும் அதனைஅண்டிய பிரதேசங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் எவரும் சொந்த மாவட்டத்தில்நியமிக்கப்படாமை வருத்தத்துக்குரிய விடயமாகும் என தெரிவித்த பிரதி அமைச்சார் ஹரீஸ்,குறிப்பாக பெண்கள் ரூபா 10 ஆயிரம் கொடுப்பனவுடன் மாவட்டத்திற்கு வெளியில்கடமையாற்றுவதானது கடினமான விடயமாகும்.

இவ்விடயத்தில் கவனமெடுத்துள்ள பிரதி அமைச்சர் ஹரீஸ், பட்டதாரிகளை அம்பாறைமாவட்டத்திற்குள் நியமிப்பதற்கு பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மதும பண்டாரவைசந்தித்து பேசவுள்ளார்.

நியமனம் பெற்றுள்ள அம்பாறை மாவட்ட பட்டதாரிகளின் தகவல்கள் விளையாட்டுத்துறைபிரதி அமைச்சரின் அலுவலகத்தினால் சேகரிக்கப்படுகின்றது.

எனவே பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் தங்களது தகவல்களை விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம்.மிஸ்பரை தொடர்பு கொண்டு வழங்குமாறுகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -