அக்கரைப்பற்றில் வீதிகளில் வீசப்பட்டிருக்கும் துண்டுப்பிரசுரம்

எம்.ஜே.எம்.சஜீத்-
க்கறைப்பற்று நீர் வழங்கள் வடிகாலமைப்பின் பிராந்திய காரியாலத்தினை அழித்து சின்னாபின்னமாக்கினார் பிராந்திய முகாமையாளர் அக்கறைப்பற்று ,அட்டாளைச்சேனை பூராகவும் துண்டுபிரசுரம்.

அக்கறைப்பற்று நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளருக்கு எதிராக அக்கறைப்பற்று நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் அனைத்து ஊழியர்களும் , உத்தியோகத்தர்களும் ஒன்றினைந்து துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளனர்.

இத்துண்டு பிரசுரத்தில் அவர் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் முன்வைத்துள்ளனர். 

அம்பாறை காரியாலயத்தில் ஒரு ஊழியர் தொழிலை இல்லாமல் செய்து ஏழை குடும்பத்தை வீதிக்கு கொண்டு வந்ததும், நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய காரியாலயத்தை அழித்து சிதைத்து சின்னாபின்னமாக்கி அழிக்க ஒரு ஏஜன்டாகவும் செயற்படுகின்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பில் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளரைத் தொடர்புப்கொண்டு இம்போட்மிரர் செய்திப்பிரிவு கேட்டபோது:

கடந்த காலங்களில் கையொப்பம் வைத்து விட்டு வீட்டுக்கும், விளையாட்டுக்கும் சென்றோருக்கு தான் பதவியேற்றதும் சங்கடமான நிலமை ஏற்பட்டுள்ளதாலும், குறிப்பிட்ட இவர்கள் நினைக்கும் நேரத்துக்கு வேலைக்கு வரமுடியாமல் நேரக்கட்டுப்பாடுள்ளமையாலும் இப்படிப் போலிக்குற்றச்சாட்டுக்களைக் கூறியுள்ளனர்.

இப்படி ஒரு சிலர் செய்யும் வேலைகளால் திறமயாய் பணிபுரியும் ஏனைய உத்தியோகத்தர்கள், ஊளியர்களின் வேலைக்கும் இடைஞ்சல் ஏற்படுவதாகவும் பிராந்திய முகாமையாளர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.

அத்துடன் அக்கரைப்பற்றுப் பிராந்திய நீர்வழங்கல் செயற்பாடுகள் இம்முறை வெற்றிகரமாகச் செல்வதாகவும் அதனைப் பார்வையிடும் கண்காணிப்பாளர்களின் அறிக்கை நல்லதொரு சான்றாகும் என்றும் தெரிவித்த முகாமையாளர்,
குறிப்பிட்ட நபர்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் தீர்மாணித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -