கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராக சிராஸ் மீராசாஹிப் நியமனம்..!

அகமட் எஸ். முகைடீன்-
ல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீனால் நேற்று (11) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. அத்தோடு அமைச்சில் அமைந்துள்ள அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருக்கான அலுவலகத்தில் தனது கடமைகளை சிராஸ் மீராசாஹிப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த பதவியானது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் சகல செயற்பாடுகளிலும் அமைச்சருடன் இணைந்து செயற்படவேண்டிய அமைச்சின் மிகப் பொறுப்பு வாய்ந்த பதவியாகும். அப்பதவியினை கட்சி மற்றும் தலைமையின் நம்பிக்கைகும் விசுவாசத்திற்கும் உரித்தான இளமையும், துடிப்பும், விவேகமும், செயல்திறனும் மிக்க சிராஸ் மீராசாஹிபுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் குறித்த அமைச்சு தொடர்பான சகல நடவடிக்கைகளும் அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -