முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-
கடந்த 01.04.2015 ல் தினகரனில் 9 மாகாணங்களையும் சேர்ந்த 106 தேசிய பாடசாலை அதிபர்; வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டது. வடமாகாணத்தில் 16 பாடசாலைகளுக்கும் ,மன்னாரில் 03 பாடசாலைகளுக்கும் கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நீண்டகால இழுத்தடிப்பிற்கு மத்தியில் இது நடைபெற்றது.
56.மன்-சித்திவிநாயகர் தேசிய பாடசாலை
57.மன்-அல்அஸ்ஹர் தேசிய பாடசாலை
58.மன்-முசலி தேசிய பாடசாலை
கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த தரம்1,2,3 சேர்ந்தோரும் ,அதிபர் தரம் 01ஐச் சேர்ந்தோரும் விண்ணப்பிக்க தகுதியானோர்.
விண்ணப்பத்தின் பிரகாரம் 12.07.15ல் போட்டிப்பரீட்சை கொழும்பில் நடைபெற்றது.
இன்னும் விண்ணப்பத்தாரிகளுக்கான நேர்முகப்பரீட்சையோ நியமனமோ எதுவுமே இடம்பெறவில்லை. இப்படிக்;காலம் இழுத்துக் கொண்டு செல்லப்படுவது .இவ்வகைப் பாடசாலைகளில் பதில் அதிபராக இருப்போருக்கு பெருத்த வாய்ப்பாக உள்ளது. தகுதியற்ற பல பதில் அதிபர்கள் பாடசாலையின் தரத்தை அழித்துக் கொண்டு இருக்கின்ற்னர். கல்வியமைச்சின் விஷேட குழுக்கள் இவ்வாறான பாடசாலைக்கு விஜயம் செய்தால் பாடசாலையின் பலவீனங்களைக் கண்டு கொள்ளலாம்.
அரசன் எப்படியோ குடிகளும் அப்படி பலவீனமான அதிபர்கள் பிற்கதவால் அரசியல் பலத்தால் பாடசாலை அதிபராகி பாடசாலைகளை சீரழித்துக் கொண்டு உள்ளனர்.தரமான அதிபரால்;தான் தரமான பாடசாலை நிருவாகம் செய்;ய முடியும்;..தரமற்ற அதிபர்களால் ஆளப்படும் தேசிய பாடசாலையின் உண்மை நிலையைக் கண்டறிய கல்வியமைச்சு விசேட புலனாய்வுக்குழுக்களை அனுப்பி பின்வரும்; விடயங்களை ஆய்வு செய்தால் உண்மை நிலைமை வெளியாகும்.
பாடசாலை அடைவுகள் ,பெறுபேறுகள் இணைப்பாடவிதான செயற்பாடுகள் நிதிப்பயன்பாடு க.பொ.த. (உ-த), (சா-த) பெறுபேறுகள் பாடசாலை முகாமைத்துவக்குழுப்பணிகள் குண நல ஒதுக்கீடு பயன்பாடு வெளிப்படைத்தன்மையுடன் விலைமனு கோள்பண்ணப்படுகிறதா?
பி.எஸ்.ஐ. செயற்பாடு பாடசாலை அபிவிருத்தி குழுச்செயற்பாடு பாடசாலை விடுதிப் பயன்பாடும் வாடகையும். மாணவர் போசாக்குத் திட்டம் (உலக உணவு) நேரசூசி பாட ஒதுக்கீடு போன்ற விடயங்களை ஆய்வு செய்தால் அங்குவிடையில்லா பல ஐயவினாக்கள் எழும் என்பது உண்மை தேசிய பாடசாலைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் அப்பாடசாலைகளில் மாகாணக கல்விப்பணிப்பாளர்கள் ,வலயக்கல்விப் பணிப்பளர் போன்றோரின் கண்காணிப்பு மதிப்பீடு போன்ற விடயங்கள் போதாமல் உள்ளதை நாம் வெளிப்படையாக அறியக்கூடியதாக உள்ளது.
'நல்லாட்சியில் இளம் துடிப்புள்ள கல்வியமைச்சர்'நியமிக்கப்பட்டிருந்தும் இவ்விடயம் தீர்வு இன்றி இழுத்தடிக்கப்படுவது ஆசியாவின் ஆச்சரியமாக உள்ளது.
(உ-ம்)
ஒரு பதிலதிபர் தனக்கு இன்னும் ஒருவருடம் தான் ஓய்வு பெறக் காலம் உள்ளது.ஆகவே என்னை யாராலும் அசைக்க முடியாது எனக்கு அரசியல் பலம் உள்ளது.எனச்சவால் விட்டுள்ளார்.இதற்கான பதிலை கல்வியமைச்சர் விரைவில் தருவாரா?
